மேற்குவங்கத்தில் கலவரத்தில் ஈடுபடும் திரிணாமுல் காங்., : நாளை நாடு தழுவிய தர்ணாவிற்கு பாஜக அழைப்பு..!!!

4 May 2021, 5:32 pm
BJP_FLAG_UpdateNews360
Quick Share

சென்னை : மேற்கு வங்கத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து நாளை நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 213 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 200க்கும் மேற்பட்ட இடங்களை வென்றிருந்தாலும், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சென்று பாஜகவில் இணைந்து போட்டியிட்ட சுவேந்தி அதிகாரியிடம் சில வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பறிபோனது.

இதனால், ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவின் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பாஜகவிற்கு ஆதரவு அளித்து வரும் பெண்களை பலாத்காரம் செய்வது, தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட கொடூர சம்பவங்களிலும் திரிணாமுல கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலவி வரும் மோதல் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் அராஜபோக்கை கண்டித்து நாடு தழுவிய தர்ணாவிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா விதிகளை கடைபிடித்து தர்ணாவை நடத்துமாறு மண்டல பாஜகவினருக்கு, அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

Views: - 145

0

0

Leave a Reply