திமுகவை சேர்ந்த நீ எதற்கு இங்க வந்த என எம்ஜிஆரால் விரட்டப்பட்டவன் நான் : அமைச்சர் கேஎன் நேரு பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 10:00 pm
KN Nehru - Updatenews360
Quick Share

திமுகவை சேர்ந்த நீ எதற்கு இங்க வந்த என எம்ஜிஆரால் விரட்டப்பட்டவன் நான் : அமைச்சர் கேஎன் நேரு பரபரப்பு பேச்சு!!

இன்ஜினியரிங் கல்லூரியில் என் தம்பியை சேர்க்க சென்ற பொழுது அப்பொழுது எம்ஜிஆர் முதல்வர் திமுக காரன் நீ எங்க இங்க வந்த என கேட்டு விரட்டப்பட்டவன் -அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை சார்பாக நடைப்பெற்றது

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி ,திருச்சி மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் நகர்புர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசுவையில், எனக்கு முன்னதாக பேசிய மாவட்ட ஆட்சியர் கெமிக்கல் இன்ஜினியரிங் எடுத்து படிப்பதற்கு ஆசிரியர்கள் காரணம் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அவர் நார்த்து போல்(North poll) என்றால் நான் சவுத் போல்(south poll) அவருக்கு நேர்மாறாக உள்ளவன். அனைத்து வகுப்புகளை கிளாஸ் டீச்சர் கவனிப்பார். ஆனால் என்னை காவல் காக்க நான்கு ஆசிரியர்கள் இருந்தனர்.

ஸ்ரீரங்கத்தில்,திருச்சியில் படித்த பொழுதும் சரி, ஜமால் முகமது கல்லூரியில் படித்த பொழுதும் சரி, அனைவரும் என்னையே கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் 5 நிமிடம் கூட தனியாக என்னை விடாத அளவுக்கு உற்று நோக்குவார்கள் ஆசிரியர்கள்.

பள்ளிக்கல்வித்துறையை மிக நேர்த்தியாக நடத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் தம்பி மகேஸ்க்கு வாழ்த்துக்கள். ஒரு இலாகா வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இலாகாவை நடத்துவதில் அமைச்சர் திறமை இல்லை என்றால் வெற்றி பெற முடியாது . அமைச்சர் மகேஸ் திறமையாக நேர்த்தியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

நாங்க எல்லாம் ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் (ஆசிரியர்கள்) என்பது எங்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் நான் இங்கே கூறினால் பேப்பர் காரர்கள் எல்லாத்தையும் எழுதி விடுவார்கள். கண்டிப்பாக உங்கள் உழைப்பு வீண் போகாது தலைவர் முதல்வர் உங்களுடன் எப்போதும் இருப்பார்.

நான் பியூசி வரை படித்தவன். ஆனால் நான் படிக்க முடியாவிட்டாலும் என் தம்பி தங்கைகளை பி ஜி முதுகலை பட்டங்களை படிக்க வைத்தேன். இன்ஜினியரிங் கல்லூரியில் என் தம்பியை சேர்க்க சென்ற பொழுது அப்பொழுது எம்ஜிஆர் முதல்வர், திமுக காரன் நீ எங்க இங்க வந்த என கேட்டு விரட்டப்பட்டவன்.

அதற்காகவே நான் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதன் மூலம் வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்றவன். தற்போது 72 வயதாகி விட்டது கல்வி கற்பதற்கு காலம் கடந்து விட்டது.

திமுகவும் தமிழக அரசும் என்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆசிரியர்களை மதிப்பவர்கள் தான் என்றும் வளரும் முடியும். எங்களை நம்பி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை கைவிட்டு உள்ளனர் மகிழ்ச்சி.

நான்கு நாட்களாக தம்பி மகேஸ் முகத்தில் சிரிப்பு கூட ஏற்படவில்லை. முதல்வர் உடன் காரில் சென்ற போது கூட இறுதியாக ஒரு சங்கம் போராட்டத்தை கைவிட்டது என்று சொன்ன பொழுது காரிலேயே குதித்தார்.

முதல்வரிடம் சொன்ன பொழுது வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம் அதை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார் என்றார்.
கண்டிப்பாக வாக்குறுதிகளை தம்பி மகேஸ் முதல்வரிடம் கூறி நிறைவேற்றி தருவார்.

மேலும் உங்களுடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாமல் இருப்பதற்கு பத்து ஆண்டு காலமாக அவர்கள்(அதிமுக) ஏகப்பட்ட சிக்கலை செய்துவிட்டு சென்று விட்டார்கள். கஜானாவில் பணம் இழுத்துக் கொண்டிருக்கிறது அதனால் சிரமப்படுகிறோம் என குறிப்பிட்டார்.

நானும் கூட என் துறை அதிகாரிகளை வைத்து இது போன்ற ஒரு கூட்டம் நடத்தலாம் என யோசித்தேன். நீங்களாவது அமர்ந்து கேட்டுக் கொண்டு உள்ளீர்கள். என் துறையில் உள்ள அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது என சிரித்துக்கொண்டே தனது பேச்சை முடித்தார் அமைச்சர் நேரு.

Views: - 306

0

0