விஜயதசமி வழிபாட்டிற்கு கோவில்கள் திறக்கப்படுமா?: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 8:27 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் விஜயதசமியன்று கோவில்களை திறக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயதசமி பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோவில்களையும் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதிகள், விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவில்களை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவத்துறை வல்லுனர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 416

0

0