பாஜகவில் இருந்து விலகல்… இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 12:49 pm

அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்.

அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த மாணிக்கம், தற்போது மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!