அரிவாளுடன் வீதியில் வலம் வந்த இளைஞர்கள்… வீடியோ வைரலானதால் கெத்து காட்ட நினைத்தவர்கள் கம்பி எண்ணும் அவலம்..

Author: Babu Lakshmanan
7 October 2022, 12:35 pm

பழனி நகரில் இரவு நேரத்தில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட குறும்பபட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் தெருக்களில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை அடுத்து ஆயுதங்களை எடுத்துச் செல்லும் சிறார்கள் குறித்து பழனி நகர போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்த ஸ்ரீகுமார், சந்துரு என்ற இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு சாலையில் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வீடியோ காட்சியில் உள்ள சில இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

https://player.vimeo.com/video/757862987?h=55b31f9150&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!