சாலையின் குறுக்கே ஓடிய மாடுகளால் விபத்து : 2 இளைஞர்கள் பலி…

Author: kavin kumar
30 January 2022, 5:26 pm
Quick Share

திருவள்ளூர் : சோழவரம் அருகே சாலையில் மாடுகள் குறுக்கே வந்தததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் புவனேஷ் , விஜயன். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் காந்திநகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே மாடு வந்தபோது நிலை தடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோன்று இருளிபட்டு பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரது மகன் மோகன் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் காரனோடை மேம்பாலம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு சோழவரம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பேர் இருசக்கர வாகன விபத்து மற்றும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோழவரம் செங்குன்றம் சாலைகளில் மாடுகள் கேட்பாரற்று சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 281

0

0