முதல்வர் ரங்கசாமியை சந்தித்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் : மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட கோரிக்கை

Author: kavin kumar
2 February 2022, 4:40 pm

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை  தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி, திமுக தலமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி அரசின்  மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இன்று சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!