தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மான் மீட்பு…

Author: kavin kumar
2 February 2022, 2:13 pm
Quick Share

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை இளைஞர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அனந்தேரி கிராமத்திற்குள் தண்ணீர் தேடி கிராமத்தை ஒட்டியுள்ள ஆரணி ஆற்றுப்படுகையொட்டி வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தியதால் புள்ளிமான் பயத்தில்.தப்பி ஓடியது. பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் புள்ளிமானை பத்திரமாக மீட்டு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பென்னலூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு சென்று பத்திரமாக காப்பு காட்டில் விட்டனர்.

Views: - 938

1

0