லிச்சி பழக் கொட்டைகளில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
14 June 2023, 3:02 pm

பொதுவாக நாம் எந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலும் அந்த பழத்தை ருசித்து விட்டு கொட்டைகளை தூக்கி எறிவது தான் வழக்கம். ஆனால் ஒரு சில பழங்களின் கொட்டைகள் அதன் பழத்தைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. அவற்றில் லிச்சி பழங்களும் அடங்கும்.

இந்த கோடைகால பழக்கொட்டைகளில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து இருக்கிறது. அவை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

லிச்சி பழத்தின் கொட்டையில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் காணப்படுகிறது. அவற்றில் பாலிபீனால்கள், ப்ளாவானாய்டுகள் ஆகியவை அடங்கும். புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை ஆன்டி ஆக்ஸிடன்டுகளுக்கு உண்டு. எனவே லிச்சி பழ கொட்டையை சாப்பிடுவது இந்த நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

லிச்சி பழம் தலைமுடிக்கு நல்லது என்று சொல்லப்படும் அதே வேளையில் லிச்சி பழத்தின் கொட்டைகள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. சருமத்தை இறுக்கி அதற்கு போதுமான நீர்ச்சத்து வழங்குவதன் மூலமாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க உதவும் பாலிபீனால்கள் லிச்சி பழத்தின் கொட்டையில் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சரும தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் சருமம் எப்பொழுதும் பளபளப்பாகவும், இளமை தோற்றத்துடனும் காணப்படும்.

லிச்சி பழத்தின் கொட்டைகள் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, வீக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. லிச்சி பழக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

இறுதியாக லிச்சி பழ கொட்டையில் நீரழிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இதன் காரணமாக இது ரத்த சர்க்கரை அளவுகளை சரியான அளவில் பராமரித்து, இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தி நீரழிவு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கிறது. நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் அல்லது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய நபர்கள் தங்களது வழக்கத்தில் லிச்சி பழ கொட்டைகளை சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…