14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்: முழக்கங்களை எழுப்பி LIC ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
28 March 2022, 4:02 pm
Quick Share

கோவை:14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றும் நாளையும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் ,மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கத்தினர் இன்றும், நாளையும் என இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படுவது உழியர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு என தெரிவித்தனர். இதனால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது.

Views: - 661

0

0