கடைசி பந்தில் அதிர்ச்சி கொடுத்த தென்னாப்பிரிக்கா : தகர்ந்து போன உலகக்கோப்பை கனவு.. வாய்ப்பை இழந்தது இந்திய அணி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2022, 2:59 pm
India Lose - Updatenews360
Quick Share

தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், 275 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி அடைந்தது.

இதனால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய மகளிர் அணி இழந்தது. தென்னாபிரிக்க அணியில் லாரா வோல்வார்ட் 80, மிக்னான் டு ப்ரீஸ் 52 , லாரா குடால் 49 ரன்கள் குவித்தனர். இந்திய அணியில் ராஜேஸ்வரி கயக்வாட், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Views: - 1388

0

0