மாநகராட்சி வரிப் பணத்தில் ரூ.4.66 கோடி கையாடல் : இ-சேவை மைய உரிமையாளருக்கு காப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 12:45 pm

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ சேவை மைய உரிமையாளர் ரமேஷ் ராஜாவை திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த சரவணன் மாநகராட்சியில் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார்.

இவர் 2023 ஜூனிலிருந்து மக்கள் வரியாக செலுத்திய ரூ 4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்தார்.

இந்த விவகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியவர இதில் ஈடுபட்ட சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சரவணன், சாந்தி, வில்லியம்சகாயராஜ் ஆகியோர் 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் ராஜா என தெரிந்தது.

இவர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். ரமேஷ் ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இம்மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

ரமேஷ் ராஜாவை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர் மீது விருதுநகரில் தனியார் வங்கியில் வேலை செய்த போது நகை கையாடலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் கையாடல் விவகாரத்தில் விசாரணை விரைவாக நடைபெறுவதாகவும் மேலும் பலர் சிக்குவர்கள் என மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!