பாத்ரூம் போக கூட பர்மிஷன் கேட்டு போகணும்.. வேதனையில் புலம்பிய பூவே உனக்காக சீரியல் நடிகை..!

Author: Vignesh
25 September 2023, 12:15 pm
Quick Share

முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. ஆனால் தற்போது பட பெயரையே நாடக தொடர்களுக்கும் வைக்க ஆரம்பித்து விட்டனர். பெயர் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல், பிண்ணனி இசையையும் அடித்து விடுகிறார்கள்.

பட பெயரை நாடகத்திற்கு வைப்பதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி யில் போட்டிப் போட்டு கொண்டு சூட்டி வருகின்றனர். ஜீ தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.
வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் நீண்டு கொண்டே போகிறது.

radhika preethi - updatenews360

ன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலும் ஹிட்டானது. அதில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் படிப்பை முடித்து, முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் சன் டிவி யில் பூவே உனக்காக சீரியலில் நடித்து நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். தற்போது, பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்த ராதிகா சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு விலகிய காரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றியம் பகிர்ந்துள்ளார்.

radhika preethi - updatenews360

நடிகர் அசிம்க்கும் தனக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும், நண்பர்களுக்குள் என்ன இருக்குமோ அதுதான் நடக்கும் என்றும், பிரச்சினையே தயாரிப்பு குழுவிடம் தான் இருந்தது. ஒன்றை ஆண்டுகளாக எனக்கு சம்பளம் தராமல் சீரியல் ஒளிபரப்பான பிறகு தான் சம்பளம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் 10,000 20,000 மட்டும் தான் கொடுப்பார்கள். அதைவிட சூட்டிங்கில் நடந்த அசோகரிமான சூழல்தான் மிக முக்கிய காரணம் என்று தெரிவித்திருந்தார்.

radhika preethi - updatenews360

அதாவது, 7:30 மணிக்கு சென்றால் தான் கேட்டை திறப்பேன். அதைவிட சூட்டிங்கில் ஆண்கள் பெண்களுக்கு ஒரே கழிவறை. கொடுமை என்னவென்றால் சிறுநீர் கழிக்க சொல்ல இயக்குனர்களிடம் பள்ளிக் குழந்தைகள் போல் பர்மிஷன் கேட்டு தான் செல்ல வேண்டும். அப்படி கேட்டு போனால் எப்போது வருவீர்கள் என்று மைக்கிலேயே கேட்பார்கள். இப்படி கஷ்டமான சூழலில் சம்பளம் கொடுக்காமல் இருந்ததாலும் தான் சீரியலை விட்டு விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

Views: - 119

0

0