பொறியாளர் தினத்தை முன்னிட்டு SMART CITY விருது : கோவை பொறியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநகராட்சி ஆணையர்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 8:54 pm
Cbe -Updatenews360
Quick Share

‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம், ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

அந்த வகையில் கோவையில் பல திட்டங்கள் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில் பல திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ஏரிகளை அழகுபடுத்துதல் மற்றும் புத்துயிர் அளிப்பது மற்றும் மாதிரி சாலைகள் மேம்பாடு ஆகியவை, இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான நான்காவது பதிப்பில் ‘ கட்டப்பட்ட சூழல் ‘ பிரிவில் கோவை முதலிடம் பெற உதவியது.

இந்த நிலையில் ஒவ்வொரு செப்டம்பர் 15ஆம் தேதி (நாளை) பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. வரும் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான SMART CITY விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் திரு. பிரதீப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரும் துணை ஆணையருமான செல்வசுரபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மண்டல தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சயில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் விதமாக குளங்கள் புனரமைப்பு மற்றும் சிறந்த மாதிரி சாலை அமைத்தல் பணிக்காக இந்திய அளவில் முதலிடம் மற்றும் தென் மண்டலத்தில் BEST CITYஆக இந்திய அளவில் தேர்வாகும் வகையில் மதிப்பிற்குரிய ஆணையர் பிரதாப் அவர்கள் தலைமையில் சிறப்பாக பணியாற்றியுள்ள கோவை மாநகராட்சி பொறியாளர்கள் அனைவரையும் போற்றி பாராட்டி விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புடன் 1000 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 ஆயிரம் பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.

Views: - 369

0

0