அடேங்கப்பா..! 165 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேண்ட்… ஏலம் போன விலையை கேட்டா ஷாக் ஆயிருவீங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 4:40 pm

கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது.

இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜீன்ஸ் பேண்ட் கனரக சுரங்க தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலுக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஜீன்ஸ் பேண்டை தற்போது ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர். 5 பட்டன்களை கொண்டு அப்போதைய பேஷனாக உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் யாருமே எதிர்பார்க்காத வகையில் 1 லட்சத்து 14 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 94 லட்சத்திற்கு ஏலம் போனது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?