தொடர்ந்து வாலை ஆட்டும் சீனா… எல்லை தாண்டி இந்திய வீரர்களுடன் கைகலப்பு ; 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அத்துமீறல்.. எல்லையில் பதற்றம்

Author: Babu Lakshmanan
13 December 2022, 4:07 pm
Quick Share

புதுடெல்லி: அருணாச்சால பிரதேச எல்லையில் இந்தியா – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். குறிப்பாக சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், உடனே சீன வீரர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருதரப்பினரும் விலகி, தங்கள் பகுதிக்கு திரும்பி விட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில், 20 இந்திய வீரர்களும், 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர்.

Views: - 347

0

0