இலங்கை வரலாற்றில் முதல்முறை… திரிகோணமலையில் கோலாகலமாக நடக்கும் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாயும் காளைகள்..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 1:08 pm
Quick Share

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று காலை 10.30 மணிக்குத் திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.

இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், அமைச்சர்கள், திரைப்பட நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடி அசத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்குத் தேவையான கேலரி, மேடை, இரும்பு தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதைக் காணப் பலரும் திரிகோணமலைக்குக் குவிந்து வருகின்றனர்.

Views: - 1352

0

0