உலகம் முழுவதும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம் : பயனாளர்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 9:45 am
FB Twit insta - Updatenews360
Quick Share

சமூக ஊடக தளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டு உள்ளது. பல டுவிட்டர் பயனர்கள் தங்களால் புதிய டுவீட்களை பதிவிட முடியவில்லை என்றும், நீங்கள் டுவீட் அனுப்புவதற்கான தினசரி வரம்பைத் தாண்டிவிட்டீர்கள் என்ற பிழைச் செய்தியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
டுவிட்டரின் குழு, இந்தச் சிக்கலைப் பற்றி அறிந்திருப்பதாகவும், அதைச் சரிசெய்வதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உங்களில் சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். சிக்கலுக்கு மன்னிக்கவும். இதை சரிசெய்வதற்கு நாங்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்று டுவிட்டர் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதேபோல், பேஸ்புக் பயனர்களின் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகளும், இன்ஸ்டாகிராம் பயனர்களின் 7 ஆயிரம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளது.

Views: - 200

0

0