செத்துப் போனாலும் பரவாயில்லை.. எனக்கு வாக்களித்துவிட்டு செத்துப்போங்க : பிரச்சாரத்தில் ட்ரம்ப் சர்ச்சை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 10:27 am
Trump
Quick Share

இந்தாண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பலரும் களத்தில் உள்ளனர்.

இந்த அதிபர் தேர்தலில் தற்போது வரை டிரம்ப் தான் முன்னிலையில் இருக்கிறார். இதற்கிடையே திங்களன்று நடந்த ஐயோவா பகுதியில் பேசிய டிரம்ப் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார். ஐயோவா பகுதியில் கடுமையான குளிர் நிலவும் நிலையில் அதைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், “நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை.. எனக்கு வாக்களித்துவிட்டு இறந்து போங்கள்.. அப்போது தான் நீங்கள் மதிப்புக்குரியவராக இருப்பீர்கள்” என்றார். மேலும், இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைத்தால் அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிப் பாதையிலும் நாட்டின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகவும் மாற்றிக் காட்டுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐயோவாவில் வானிலை மிக மோசமாக இருக்கும் நிலையில், வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கே குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தல் நடக்கும் நிலையில், டிரம்ப் இப்படிப் பேசியுள்ளார். ஐயோவாவில் கடுமையான குளிர் மற்றும் பனி நிலவும் நிலையில், டிரம்ப் 3 பிரச்சார கூட்டங்களை ரத்து செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது வீட்டிலேயே இருப்பதற்கான நேரம் இல்லை.. உங்களால் வீட்டிலேயே உட்கார முடியாது. நீங்கள் ஒரு நாயைப் போல நோய்வாய்ப்பட்டிருந்தாலும் கூட நீங்கள் வாக்களித்தே தீர வேண்டும்.. நீங்கள் வாக்களித்துவிட்டு உயிரிழந்தாலும் கூட உங்கள் செயலை நாங்கள் மதிப்போம்… பாராட்டுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 1222

0

0