பொதுஇடத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை…? வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 11:09 am

முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இன்று அந்நாட்டின் நரா என்னும் பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஷின்சோ அபே மீது பின்னால் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், மார்பில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து, படுகாயமடைந்து மயக்க நிலையில் இருந்த ஷின்சோ அபேவை அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இதனிடையே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவர் பொதுநிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரை பின்னால் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?