ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன அரங்கம் : தீயாய் பரவும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 9:58 am
cena
Quick Share

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன அரங்கம் : தீயாய் பரவும் வீடியோ!

உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார் விருதுகள் அறியப்படுகின்றன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 2-வது முறையாக காமெடி நடிகரான ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். இந்த விருது வழங்கும் விழாவில், எம்மா ஸ்டோன், ரியான் கோஸ்லிங், ராபர்ட் டி நிரோ, பிராட்லி கூப்பர் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

இதில், புவர் திங்ஸ் என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இதனை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா வழங்குவதற்காக மேடையில் தோன்றினார்.

அவர் வருவதற்கு முன் நிகழ்ச்சி தொகுப்பாளரான கிம்மல் பார்வையாளர்களை நோக்கி, நிர்வாண மனிதர் ஒருவர் மேடையில் ஓடி சென்றால் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார்.

கிம்மல் அப்படி கேட்டதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை எழுந்தது. அப்போது, மேடையின் ஓரத்தில் இருந்து ஜான் சீனா தலையை எட்டி பார்க்கிறார். பின்னர் அவர், நிர்வாண நிலையில் மேடையில் மெல்ல நடந்து வருகிறார். எனினும், அந்தரங்க பாகங்களை மறைத்தபடி மேடையில் மைக் முன்னே நின்று பேசினார்.

இதனை கேட்டு பார்வையாளர்கள் சிரிப்பலை எழுந்தது. ஆஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு 8 பிரிவுகளுக்கு பார்பி படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பார்பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜான் சீனா நடித்திருக்கிறார். இந்த விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதுக்கான பெயர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொண்டாட்டங்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் ஆகியவை தொடங்கின.

எனினும், இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் இதனை நேரலையாக காண முடியும். இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதிகாலை 4 மணி முதல் லைவாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த முறை இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை. கடந்த 2023-ம் ஆண்டில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவற்றில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவுகளும் அடங்கும். இதுதவிர, பார்பி, புவர் திங்ஸ், கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் ஆகிய படங்களும் பரிந்துரை பட வரிசையில் இடம் பெற்றுள்ளன.

Views: - 674

0

0