மொராக்கோவில் பயங்கரம்… நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போன நகரங்கள் ; 296 பேர் பலியான சோகம்…!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 9:10 am
Quick Share

மொராக்கோவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 296 பேர் உயிரிழந்தனர்.

வட் ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மாரகேஷ் பகுதியில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மேலும் உயரமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், கட்டிட இடிபாடுகளில் மக்கள் சிக்கும் நிலை ஏற்பட்டது.

இதுவரையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரலாற்று சிறப்பு மிக்க மொராக்கோ சிவப்பு சுவர்கள் சேதமடைந்தது குறித்து அந்த நாட்டு மக்கள் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 719

0

0