நீச்சல் குளத்தில் மூழ்கி 11 வயது சிறுவன் பலி : நிர்வாகத்தின் அலட்சியம்.. பாதுகாப்பு உபகரணம் வழங்காததே காரணம் என குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 4:37 pm
Swimming Pool Dead -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஐதராபாத் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சைதன்யா நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்திற்கு 11 வயது மாணவன் மனோஜ் நீச்சல் அடிப்பதற்காக சென்றான்.

திடீரென்று தண்ணீருக்குள் குதித்த மனோஜ் பின்னர் மேலே வரவில்லை.
இதனை பார்த்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நீச்சல் குள நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.

இந்தநிலையில் தண்ணீருக்குள் இருந்து மனோஜ் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து மனோஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.

நீச்சல் பயிற்சிக்காக வருபவர்களுக்கு நீச்சல் குளத்தை நிர்வகிப்பவர்கள் லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Views: - 526

0

0