1985 ஏர் இந்தியா விமான தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் சுட்டுக்கொலை : கனடாவில் சடலமாக மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 2:22 pm
Sikh Rioudaman Singh Shot Dead - Updatenews360
Quick Share

1985 ஆம் ஆண்டில், ஏர் இந்தியா விமானம் 182 வெடிகுண்டு தாக்குதலில் 329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் அயர்லாந்து கடற்கரையில் நடைபெற்றது.

அந்த வெடிகுண்டு தாக்குதலில் ரிபுதமன் சிங் மாலிக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணையின்போது, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வான்கூவரில் தொழில் செய்துவந்த ரிபுதமன் சிங் மாலிக், நேற்று கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வான்கூவரில் உள்ள கல்சா கிரெடிட் யூனியனின் (Khalsa Credit Union) நிறுவனர் ரிபுதமன் சிங் மாலிக் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​துப்பாக்கியால் சுடப்பட்டார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் ஆடை வணிகம் செய்துக் கொண்டிருந்த சீக்கியர் ரிபுதமன் சிங் மாலிக் தனது வணிக வளாகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா போலீசார் (Royal Canadian Mounted Police) சம்பவத்தை உறுதிப்படுத்திய போதிலும், பாதிக்கப்பட்டவர் தொடர்பான எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

Views: - 566

0

0