வசூலில் SK படைத்த சாதனை.. 4 நாட்களில் ‘டான்’ வசூல் இவ்ளோவா?

Author: Rajesh
17 May 2022, 10:49 am
Quick Share

சுpவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் டான் திரைப்படம் நல்ல கலெக்ஷன் .வந்துள்ளதாகவே தெரிகிறது. 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Views: - 641

2

0