முந்திரிக்காட்டில் 4 வயது சிறுவன் அடித்துக்கொலை : கைதான பக்கத்து வீட்டு இளம்பெண் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு!!

Author: kavin kumar
27 January 2022, 5:40 pm
Quick Share

கடலூர் : பண்ருட்டி அருகே நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து சடலம் மீட்கப்பட்ட வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொள்ளை கிராமத்தில் கார் டிரைவர் செந்தில் நாதன் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சிறுவன் அஸ்வின் நேற்று மதியம் முதல் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.இந்நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் அஸ்வினின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அதாவது முந்திரி தோப்பில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், சிறுவனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கீழக்கொல்லை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் காவல்துறையினர் சிறுவன் மரணம் குறித்து சந்தேகத்தின்பேரில் பக்கத்து வீட்டு பெண் ரஞ்சிதா (21) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அஸ்வந்தை அழைத்து சென்றார் என்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ரஞ்சிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Views: - 958

0

0