தை அமாவாசை : புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Author: kavin kumar
31 January 2022, 2:00 pm

திருச்சி : தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித நீராடி தர்பணம் செய்தனர்.

தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம் மற்றும் பூஜைகளை செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் தை அம்மாவாசையில் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இன்று அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமான பொது மக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மேலும் அசம்பாவித தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டனர். இதேபோல் திருச்சி தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?