பயிர் சாகுபடி பாசனத்திற்காக நாகாவதி அணை திறப்பு

Author: kavin kumar
14 February 2022, 3:57 pm

தருமபுரி : நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தண்ணீர் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகாவதி நீர்த்தேக்கதிலிருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தைக்கொண்டும், பென்னாகரம் வட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாயில் ஒவ்வொரு கால்வாயிலும் இரண்டு மண்டலங்களாக பிரித்து முதல் மண்டலத்திற்கு 5 நாட்கள் இரண்டாவது மண்டலத்திற்கு வினாடிக்கு 39.80 கன அடி வீதம் இன்று முதல் 2 ம் போக புன் செய் பயிர் சாகுபடி பாசனத்திற்கு 100 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தண்ணீர் திறந்து வைத்தார்.

இதன் மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,993 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் விமலநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…