ஜோதிடத்தில் நேரம் சரியில்லை… 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூரம் : நாடகமாடிய தாய் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 8:45 pm

திண்டுக்கல் : பழனி அருகே ஜோதிடத்தில் நேரம் சரியில்லை என்று கூறி 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4 மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று தந்தை மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், குழந்தைகளுடன் வீட்டில் இருந்த தாய் லதா 4மாத கைக்குழந்தை கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியுள்ளனர். அப்போது அருகில் உள்ள பாலாறு பொருந்தலாறு ஆற்றின்‌ கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துவந்தனர். மருத்துவர்களும் சோதனை செய்து குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணை செய்தனர்.

தாய் லதா முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், தாயிடம் நடத்திய விசாரணையில் தாய் லதா தனக்கு மனக்கஷ்டம் மற்றும் உடல்நிலை சரியில்லை மற்றும் ஜாதகத்தில் இரண்டாவது குழந்தையால் நேரம் சரியில்லை என்று கூறியதால் தனது மகனை ஆற்றில் தூக்கி வீசி கொண்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!