சிக்குனு ஃபிட்டா இருக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்!!!

Author: Hemalatha Ramkumar
25 May 2022, 5:40 pm
Quick Share

உடல் எடையை சரியாக பராமரிக்க குறிப்புகளைத் தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். உங்களுடைய எடையை எப்பொழுதும் சரியான அளவில் வைத்திருக்க இந்த மாதிரி சரியான உணவு முறையை கடைப்பிடியுங்கள்.
*கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் என‌ அனைத்து சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும். இவ்வாறான சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்கிறார்கள். அப்படி செய்யாமல் அந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* காய்கறிகள் மற்றும் பழங்களில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அடர்த்தியான காய்கறிகள் மற்றும் பழங்கள் நம்முடைய உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் எடை சரியான அளவிலும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். கொழுப்பு குறைந்த அளவில் இருந்தால், கழிவுகள் படிவதைத் தடுக்கும்.

* முட்டை, ஆடு, இறால், மீன், நாட்டுக்கோழி போன்ற இறைச்சி வகைகளை எண்ணெயில் பொறிக்காமல், சாப்பிடுவதன் மூலம் சீரான உடல் எடையும் இருக்கலாம்.

* பால், பன்னீர், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவற்றை சரியான அளவில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதால் உடல் எடையும் சரியான அளவில் இருக்கும்.

*நாம் அன்றாடம் உட்கொள்ளும் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி போன்றவற்றில் உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதுடன், உணவை எளிதில் செரிக்கச் செய்து உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

* தானியங்கள், சுண்டல், வேர்க்கடலை, பருப்பு வகைகள், நட்ஸ் வகை உணவுகளை காலை மற்றும் மாலை இடைவேளை நேரங்களில் சாப்பிடலாம். இவை உடலில் நல்ல கொழுப்பு சேரவும், உடலுக்கு உடனடி ஆற்றலும் கொடுக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளவர்கள் ஒரு கையளவு நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிடுவதால் சரியான மற்றும் ஆரோக்கியமான எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.

*நம்முடைய உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவுகளை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Views: - 596

0

0