ஆட்டோக்களில் மினி நூலகம் : எதுக்கு தெரியுமா? கோவை கமிஷ்னரின் புதிய ஐடியா.. பயணிகள் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 2:30 pm
Auto Mini Libraru -Updatenews360
Quick Share

கோவையில். ஆட்டோக்களில் ‘மினி லைப்ரரி’ துவக்கப்போவதாக சிட்டி போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார். அதன்படி இன்று கோவை கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆட்டோ லைப்ரரி துவக்கி வைத்து பேசினார்.

ஆட்டோ டிரைவர்கள் மீது நம்பிக்கை வரும் வகையில், நடந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தவும், முயற்சிக்க வேண்டும்.

ஆட்டோ டிரைவர்கள், பயணிகள் நலன் கருதி, ஒவ்வொரு ஆட்டோவிலும் மினி நுாலகம் அமைக்கப்படும். மாதம் 3 முதல் 5 புத்தகங்கள் ஒவ்வொரு ஆட்டோவிலும் வைக்கப்படும்.

மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும். இதன் மூலம், பயணிகளுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். அடுத்த கட்டமாக கால்டாக்ஸிகளில் நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும் இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.

Views: - 376

0

0