விமர்சனங்களை விரட்டியடித்த விராட் கோலி : மகுடம் சூட்டிய ஐசிசி… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2022, 3:52 pm
Quick Share

அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் அட்டகாசமான கம்பேக்கை கொடுத்த விராட் கோலி இன்று வரை யாராலும் தடுக்க முடியாத வகையில் ஆடி வருகிறார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் கூட அதிக ரன்களை குவித்த வீரராக அவர் திகழ்கிறார்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது விராட் கோலி ஆடிய இன்னிங்ஸ், அவரின் பயணத்திலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது.

Virat Kohli - Updatenews360

இந்நிலையில் விராட் கோலியின் இந்த உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறந்த வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து ஐசிசி கவுரவப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4 இன்னிங்ஸ் மட்டுமே ஆடிய அவருக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் கோலி 4 இன்னிங்ஸ்கள் தான் ஆடினார். இதில் நாட் அவுட்டாகாமல் மூன்று முக்கியமான இன்னிங்ஸை ஆடியுள்ளார். மாதத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 49* ரன்களை விளாசினார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்களையும், நெதர்லாந்து அணிக்கு எதிராக 62* ரன்களையும் விளாசினார்.

virat kohli - updatenews360

விராட் கோலி மட்டுமின்றி இந்த விருதிற்காக மேலும் 2 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர் கடந்த மாதத்தில் 7 இன்னிங்ஸ்களில் 303 ரன்களை விளாசியுள்ளார். மற்றொரு வீரர் ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராசா ஆகும். இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி வருகிறார். ஆனால் இவர்களை முந்தி கோலிக்கு விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய கோலி, ஐசிசி-ன் விருதை பெறுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப்போன்றே கடந்த மாதம் சிறப்பாக விளையாடிய மற்ற வீரர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இதே போல எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி என கோலி கூறியுள்ளார்.

Views: - 312

0

0