சுவையும், ஆரோக்கியமும் கலந்த 90s கிட்ஸ் கமர்கட் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
3 February 2023, 6:29 pm

பழங்காலத்தில் செய்யப்பட்ட பலகாரங்கள் மற்றும் தின்பண்டங்கள் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமான ஒன்றாகவும் இருந்து வருகின்றது. அந்த வரிசையில் பலரது ஃபேவரெட்டான கமர்கட் நிச்சயமாக உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கமர்கட் ரெசிபி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். குழந்தைகள் மட்டும் அன்றி அனைவருக்கும் மிகவும் பிடித்த கமர்கட்டை எவ்வாறு செய்வது என்று அறிந்து கொள்ளலாம்…

தேவையான பொருட்கள்:

வெல்லம்- ¼ கிலோ

தேங்காய் துருவல்- 2 கப்

ஏலக்காய் – 5

நெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, அதில் ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அது உருகும் வரை சூடாக்கவும். பின்பு இந்த வெல்ல பாகினை நன்கு வடிகட்டவும். தேங்காய் துருவல் 2 கப் அளவு எடுத்து கடாயில் இட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் தேங்காய் துருவலை வெல்லப்பாகில் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லமும் தேங்காய் துருவலும் நன்றாக கலந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

இந்த கலவை சிறிது சூடு குறைந்தவுடன் கைகளால் தொடக்கூடிய மிதமான சூட்டில் இருக்கும் போது, இந்த பாகு கைகளில் ஒட்டாத வண்ணம் கைகளில் சிறிது நெய் தடவி சிறிய அளவிலான உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். இப்போது
சுவையான கமர்கட் தயார். இதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!