கேசரின்னா இப்படி இருக்கணும்… வாயில போட்ட உடனே கரையும் சத்தான சிறுதானிய கேசரி!!!

Author: Hemalatha Ramkumar
15 March 2023, 7:44 pm
Quick Share

நம் வீட்டு விசேஷங்களில் பெரும்பாலும் கேசரி இல்லாமல் இருக்காது. கேசரி என்றால் ரவையில் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களில் கூட கேசரி செய்யலாம். பொதுவாக சிறுதானிய உணவுகளை யாரும் விரும்புவதில்லை. இந்த மாதிரி கேசரி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி – ஒரு கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 100 ml
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
சுக்குத்தூள் – 2 சிட்டிகை முந்திரி – 10
உலர் திராட்சை – 10
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:
*முதலில் ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து குதிரைவாலி அரிசியை சேர்த்து வறுக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

*வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்ல நீரை மீண்டும் அடுப்பில் வைத்துகொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது வறுத்த குதிரைவாலி அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும்.

*கேசரி பதத்திற்கு வந்ததும் நெய் ஊற்றி கிளறவும்.

*ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து கேசரியில் சேர்க்கவும்.

*இறுதியில் ஏலக்காய் தூள், சுக்கு தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அடுப்பை அணைத்தால் ருசியான குதிரைவாலி அரிசி கேசரி தயார்.

Views: - 337

0

0