கள்ளக்காதலியுடன் தான் வாழ்வேன் என காவல்நிலையத்தில் இருந்து ஓடிய நபரை தாக்கிய உறவினர்கள்.. செய்தியாளர்களுக்கு மிரட்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 7:41 pm

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசுல், என்பவருக்கும் ஆயிஷா பானுக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்ததை அடுத்து இவரது மனைவி ஹாய்ஸ்ஷாபானு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ரசல் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு இருக்கும் பொழுது தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணோடு தான் நான் வாழ்வேன், இல்லையென்றால் செத்து விடுவேன் என்று சொல்லிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி சாலைகளில் வருகின்ற பேருந்துகளில் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபடும் போது ரசல், உறவினர்கள் கார்கள் மூலம் வந்து அவரை அடித்து இழுத்துச் செல்லும் போது அங்கே படம்பிடித்து இருந்த நபரை ரசல் உறவினர்கள் வீடியோ எடுக்க கூடாது என்று தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி தாக்கி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உணர முடிகிறது.

மேலும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…