நா ஒரு பேச்சுலர்.. ஆனா, எனக்கு குழந்தை இருக்கு.. கண்ணீருடன் பகிர்ந்த விஷாலின் மறுப்பக்கம்..!
Author: Vignesh5 செப்டம்பர் 2023, 1:45 மணி
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன.
சினிமா படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் விஷால் சில சமூகப் பணிகளையும் அவ்வப்போது செய்துதான் வருகிறார். அந்த வகையில், சாதாரண குடும்பத்தில் பிறந்த சிறுமி ஒருவரை இந்தியாவில் இருக்கும் பிரபல கல்லூரிகளில் ஒன்றான Stella Maris கல்லூரியில் ஆங்கில மொழியில் படிக்க வைக்கிறார். இதனை திரைப்பட வெளியீட்டு விழாவில் கண்ணீருடன் விஷால் பகிர்ந்து கொண்டார். அந்த சிறுமி தான் என்னுடைய பொண்ணு எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சிறுமி கூறிய போது நான் சாதிக்க வேண்டும் என நினைத்த கனவுகளை விஷால் அண்ணா நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதற்காக எல்லா வசதிகளையும் விஷால் அண்ணா செய்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் நன்றி என கண்ணீருடன் பேசியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியை பார்த்த விஷால் ரசிகர்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தும் வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.
6
2