அந்த ஆளு ஒரு விஷம்… மோசமான உறவில் இருந்ததை குறித்து நடிகை அஞ்சலி வருத்தம்!

Author: Shree
30 November 2023, 5:10 pm
anjali jai
Quick Share

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.

ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் வாணி போஜனும் விட்டுச்செல்ல மிகுந்த விரக்திக்கு ஆளான ஜெய் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்ப்போது நயன்தாராவுக்கு ஜோடியாக அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மோசமான காதல் அனுபவம் குறித்து பேசிய அஞ்சலி, நான் மோசமான நபருடன் உறவில் இருந்தேன். அது ஒரு விஷத்தனமான காதல். ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ளமுடியாமல் அந்த உறவில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என அஞ்சலி கூறினார்.

Views: - 134

0

0