கதீஜாவாக நடித்ததற்கு சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Author: Rajesh
18 May 2022, 10:01 am
Quick Share

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் முக்கோண காதல் கதையாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா- விஜய்சேதுபதி இணைந்து, நடித்திருந்தனர்.

இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் இமத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கதாபாத்திரங்களில் ஒருவர் சமந்தா நடித்த கதீஜா. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 543

0

0