5 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 40 வருடமாக விவசாயம் : மீட்க சென்ற வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு.. விவசாயி தீக்குளிக்க முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 7:05 pm
Govt Land Grabbed -Updatenews360
Quick Share

மதுரை : 2 தலைமுறையாக அரசு நிலத்தை அக்கிரமித்து விவசாயம் செய்தவரின் நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள் முன்னிலை விவசாயி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விக்கிரமங்களல்ம அருகே வையத்தான் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 55 செண்ட் புறம் போக்கு நிலம் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மற்றும் காவல்துறையினருடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தில் இருந்த தென்னை உள்ளிட்டவற்றை அகற்றினர்.

இதையடுத்து 2 தலைமுறைகளாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் என அர்ஜுணன் என்பவர் வருவாய் துறையினரை பணி செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் வருவாய் துறையினர் தங்கள் பணியை தொடர்ந்து செய்யவே, அர்ஜுணன் மண்ணென்னையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

Views: - 539

0

0