தொடர்ந்து 4 படங்களில் ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை – தலைவரே வெறுத்த தருணம்!

Author: Shree
29 November 2023, 4:50 pm
aishwarya rai rajinikanth
Quick Share

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வயதாகியும் இன்னும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை எந்த ஒரு ஹீரோக்களாலும் முறியடிக்கவே முடியாது. ரஜினி படத்தில் ஒரு சின்ன ரோலாவது கிடைத்துவிடாதா? என எத்தனையோ திறமைவாய்ந்த நடிகர், நடிகைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது தொடர்ந்து ரஜினியின் சிவாஜி: தி பாஸ், சந்திரமுகி, பாபா , படையப்பா உள்ளிட்ட நன்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தபோதும் நடிகை ஐஸ்வர்யா ராய் சில காரணங்களை சொல்லி நிராகரித்துவிட்டாராம்.

இதனால் ரஜினி ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பாகி போக பின்னர் எந்திரன் திரைப்படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இருந்தாலும் அவர் வேண்டாம் என நிராகரித்த அத்தனை படங்களுக்கு ரஜினியின் கேரியரில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 217

0

0