அனிமல் படத்தில் வரும் ரூ. 800 கோடி வீடு இந்த ஸ்டார் நடிகரின் வீடு தானாம்!

Author: Rajesh
5 December 2023, 8:07 pm
sahif alikhan
Quick Share

சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. ஆம், படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 21 நிமிடத்திற்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

என்னதான் பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் ஒரு அளவில்லையா? என ஆடியன்ஸ் விளாசித்தள்ளியுள்ளனர். தியேட்டரில் உட்கார்ந்திருந்த எல்லோரும் ஆள விடுடா சாமி என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்துள்ளனர். அப்பா மகன் சண்டைக்கு எதுக்கு இவ்வளவு வன்முறை? ரன்பீர் கபூர் வெர்ஷனில் ஒரு அர்ஜுன் ரெட்டி என மோசமாக விமர்சித்துள்ளனர்.

இப்படி பல விமர்சனங்களை தாண்டி ரன்பீர் கபூர் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இப்படத்தில் வரும் பங்களா பிரபல பாலிவுட் நடிகரான சைப் அலி கானின் சொந்தமான அரண்மனை தானாம் அதன் விலை கிட்டத்தட்ட ரூ. 800 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கிறது.

Views: - 125

0

0