அமெரிக்காவுக்கு போனதும் ஆளே மாறிட்டாரு அண்ணாமலை : அங்க போயும் இவர் செஞ்ச வேலைய பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 6:51 pm
America Annamalai - Updatenews360
Quick Share

அண்ணாமலை 2 வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். உயர்கல்வி தொடர்பாக அவர் அமெரிக்கா சென்றதாகவும், இது அவரது தனிப்பட்ட பயணம் எனவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் ‘இரண்டு வார கட்சி பயணமாக அண்ணனும் நானும் அமெரிக்கா செல்கிறோம்’ என பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனால் இந்த பயணம் என்பது அண்ணாமலையில் தனிப்பட்ட பயணமா அல்லது கட்சி சார்ந்த பயணமாக என்ற கேள்விகள் எழுந்தன.

இதனால் அமெரிக்கா சென்ற அண்ணாமலை அரசியல் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபடலாம் என்ற தகவல்கள் வட்டமடிக்க துவங்கின. இதற்கு மத்தியில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை, நான் எனது Fellowship படிப்பு காரணங்களுக்காக அமெரிக்கா புறப்படுகிறேன். 13ம் தேதி வரை அங்கு இருப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து செப்டம்பர் 30ல் புறப்பட்ட அண்ணாமலை அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது ஒரு போட்டோ வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது. அதில் குழந்தையுடன் தம்பதியை அண்ணாமலை செல்போனில் போட்டோ எடுக்கிறார். இதன்மூலம் அமெரிக்கா சென்ற அண்ணாமலை போட்டோகிராபராக மாறியதாக இணையதளத்தில் இந்த படம் பரப்ப்பப்பட்டு வருகிறது.

அதாவது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள முயர் வூட்ஸ் தேசிய நினைவுச்சின்னத்தை (muir woods natinal monument) அண்ணாமலை சென்றார். அப்போது அங்கிருந்த தம்பதி அவரை போட்டோ எடுத்து தரும்படி கோரிய நிலையில் அண்ணாமலை அவர்களை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இந்த தம்பதியை போட்டோ எடுக்கும் படம் தான் தற்போது இணையதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தற்போது பாஜகவினர், ‛எளிமையான மனிதர்’ உள்பட பல்வேறு விளக்கங்களுடன் படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 1132

1

0