2026ல் தமிழக முதல்வராக அண்ணாமலை பதவியேற்பார் : பாஜக பிரமுகரின் பேச்சால் அரசியல் கட்சிகளுக்குள் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 4:48 pm
Annamalai CM - Updatenews360
Quick Share

2026 தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து முதல்வராக அண்ணாமலை பதவி ஏற்பார் என டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.

மதுரை பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி சார்பாக மந்திரி காந்தி மிஷன் அருகே உள்ள பூங்கா முருகன் கோயில் அதன் மாவட்ட தலைவர் சரவணன் குமார் தலைமையில் மற்றும் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முருகன் கோயில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் முருகன் தங்கத்தேர் இழுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இதில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர் கூறும்போது, இன்னும் வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக வழிநடத்தி 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சி அமைத்து முதல்வராக பொறுப்பேற்று இன்று திராவிட முன்னேற்ற கழக செய்யக்கூடிய அனைத்து ஏமாற்று வேலைகளில் புறம்தள்ளி ஊழலற்ற நிர்வாகத்தை எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தருவார் என்று நம்பிக்கையுடன் அது நடக்க வேண்டும் என்று இன்று இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Views: - 744

0

0