சூர்யகுமார் யாதவா..? ஐயோ, எங்ககிட்ட அவ்வளவு பணமில்ல ; SKY-யின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டு போன ஆஸி., அதிரடி வீரர்…!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 8:03 pm
Quick Share

தற்போது பேட்டிங்கில் கலக்கி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் புகழ்ந்து பேசியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ என போற்றப்படும் வீரர் சூர்யகுமார் யாதவ். தனது அசாத்திய பேட்டிங்கால் ஐசிசியின் டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பாக ஆடி வரும் அவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதுடன், பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்.

suryakumar yadav - updatenews360

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் 239 ரன்களை குவித்து அவர் அசத்தி இருந்தார். அதை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். அவரது இந்தப் பேட்டிங் ஃபார்மை பார்த்து உலக நாடுகளே மிரண்டு போயுள்ளன.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவை அதிரடி ஆட்டத்திற்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

maxwell - updatenews360

வருங்காலத்தில் பிக் பாஷ் லீக்கில் சூர்யகுமார் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, “அவரை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை. அவரை வாங்குவதற்கான பணத்தை ஈட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரரையும் நாங்கள் நீக்க வேண்டும்” என புன்னகையுடன் தெரிவித்தார்.

Views: - 400

6

1