தண்ணீர் தேடி கிணற்றுக்குள் இரு குட்டிகளுடன் தவறி விழுந்த கரடி : முதுகில் குட்டிகளை சுமந்து பரிதவித்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 7:51 pm
Bear trap with cubs in well - Updatenews360
Quick Share

தெலுங்கானா : தண்ணீர் தேடி வந்து கிணற்றில் சிக்கிய தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் பாதுகாப்பாக வெளியேறி காட்சிகள் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியால் மாவட்டம் மல்லியால் மண்டலம் பல்வந்த்பூர் பகுதி விவசாய கிணற்றில் தண்ணீர் தேடி வந்த தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் கிணற்றில் சிக்கிக்கொண்டது.

தாய் கரடி முதுகில் இரண்டு குட்டிகளுடன் நீண்ட நேரமாக கிணற்றில் இருந்து வெளியேற செய்த முயற்சி தோல்வி அடைந்தது .

இதைக் கண்ட அவ்வழியாக வந்த கிராம மக்கள் கிணற்றில் தாய் கரடி மற்றும் குட்டிகள் சிக்கிக் இருப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஏணியை கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கினர்.

ஏணியை கண்டதும் கரடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று முதுகில் குட்டிகளுடன் ஏணியில் ஏறி தப்பிச்சென்று வனப்பகுதிக்குள் மறைந்தது.

Views: - 562

0

0