ரோஸ் வாட்டரை இந்த பொருட்களுடன் பயன்படுத்தினால் பிரச்சினை தான்!!!

Author: Hemalatha Ramkumar
25 June 2023, 4:02 pm
Quick Share

சருமத்திற்கான பெரும்பாலான வீட்டு வைத்தியங்களில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு நேச்சுரல் ஸ்கின் டோனராக செயல்படுகிறது. ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் சருமத்தை ஆற்றும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கு போன்றவற்றை அகற்றி அவை சரும துளைகளை அடைக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. ஆனால் ரோஸ் வாட்டரை பயன்படுத்தும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில பொருட்களுடன் ரோஸ் வாட்டரை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அது என்ன மாதிரியான பொருட்கள் என்பதையும், அவ்வாறு பயன்படுத்தினால் அதனால் என்ன தீமைகள் ஏற்படும் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒரு காட்டன் பஞ்சில் ஒரு சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து அதனை உங்கள் முகம் முழுவதும் துடைத்து முகத்திற்கு ஒரு கிளன்ஸர் அல்லது ஃபேஸ் வாஷ் போல ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது சருமத்தை டோன் செய்கிறது. ரோஸ் வாட்டரை மிஸ்ட் ஆகவும் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.

ரோஸ் வாட்டரை அத்தியாவசிய எண்ணெய்களோடு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அது அலர்ஜியை ஏற்படுத்தி விடும். மேலும் ஆஸ்துமா டெர்மாடிடிஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இது தீங்காக அமையலாம். எனவே ரோஸ் வாட்டரை அத்தியாவசிய எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்தாதீர்கள்.

விட்ச் ஹேசல் இயற்கை அஸ்ட்ரின்ஜன்டாக பயன்படுத்தப்படுகிறது. இதனை ரோஸ் வாட்டருடன் கலந்து பயன்படுத்தும்போது சருமத்தில் எரிச்சலும், சரும வறட்சியும் உண்டாகிறது. ஆகையால் இந்த காம்பினேஷனை தவிர்த்து விடுங்கள்.

பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் காணப்படுகிறது. இதனை சருமத்தில் பயன்படுத்தும் பொழுது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை குறைத்து முகப்பரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஆனால் இதனை ரோஸ் வாட்டருடன் பயன்படுத்தினால் அது சருமத்தின் பிஹெச் அளவை மாற்றி, சருமத்தில் வறட்சி மற்றும் அதன் உணர்திறன் தன்மையை அதிகரிக்கிறது.

வினிகர் என்பது சருமத்தில் இருக்கக்கூடிய முகப்பருவைப் போக்கி சருமத்தின் துணியை மேம்படுத்துகிறது. ஆனால் இது ரோஸ் வாட்டருடன் இணையும் பொழுது சருமத்தின் pH அளவை மாற்றி அமைத்து விடுகிறது.

எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது முகப்பருவுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ரோஸ் வாட்டருடன் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது சரும pH -ஐ பாதிக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 3943

2

0