கருவளையம் நிரந்தரமா மறைய என்ன தான் பண்றது…???

Author: Hemalatha Ramkumar
19 June 2023, 5:50 pm
Quick Share

நமது ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது சருமத்திற்கு கொடுத்திருந்தாலே முகப்பருவிற்கான வைத்தியங்கள் என்ன, கருவளையத்தை போக்குவது எப்படி, பாத வெடிப்பு மறைய என்ன செய்யலாம் போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். அதிலும் கண்களைச் சுற்றி இருக்கக்கூடிய சருமம் மிகவும் சென்சிடிவானது. இதற்கு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதனை நாம் செய்ய தவறி விடுவதால் கருவளையங்கள் உருவாகிறது. இன்று பலர் கருவளையம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக நேரம் மொபைல் லேப்டாப் போன்றவற்றை பார்ப்பது, மோசமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, போதுமான தூக்கம் பெறாமல் இருப்பது போன்றவை கருவளையத்தை ஏற்படுத்துகின்றன. கருவளையம் மறைய என்னென்ன சிகிச்சைகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு கருவளையம் எந்தெந்த காரணங்களுக்காக உருவாகிறது என்பதை
அறிவதன் மூலம் எதிர்காலத்தில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கருவளையங்கள் தோன்ற காரணம்:
இரவு நேரத்தில் நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் அதிகமாகிறது. கண்களுக்கு அருகில் உள்ள தோலானது மிகவும் மெல்லியதாக இருப்பதால், கண்களைச் சுற்றி கருநிற வளையம் உண்டாகிறது. உடலானது அதிக அளவில் மெலனின் உற்பத்தி செய்யும் போதும் கருவளையம் உண்டாகிறது.

ஒரு சிலருக்கு கண்களுக்கு கீழே குறைவான கொழுப்பு திசுக்கள் காணப்படும் அல்லது கண்களை சுற்றி உள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கருவளையமாக தோன்றும்.

நமது உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் அது ரத்த சோகையை ஏற்படுத்தும். கருவளையம் ரத்த சோகைக்கான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.

கருவளையத்தை மறைய செய்வதற்கான இயற்கை சிகிச்சைகள்:-
பப்பாளியில் ஏராளமான வைட்டமின்கள் காணப்படுகிறது. அதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இவை கண்களை சுற்றி உள்ள சருமத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. அதோடு வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. ஆகவே பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் இயற்கையாகவே மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி சாற்றினை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என கண்களைச் சுற்றி தடவி வந்தால் கருவளையங்கள் மறையும்.

உருளைக்கிழங்கு சாற்றை காட்டன் பந்தில் நனைத்து கண்களை சுற்றி உள்ள சருமத்தில் தடவுங்கள். இதனை 10 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மறையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1987

0

0