வெளிய போய்ட்டு வீட்டுக்கு வரும்போது முகம் கருத்துபோய்டுதா… இந்த DIY ஃபேஸ் மிஸ்ட் யூஸ் பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
23 February 2023, 10:00 am
Quick Share

இன்று இந்த பதிவில் நாம் ஒரு DIY ஃபேஸ் மிஸ்ட் குறித்து தான் பார்க்க உள்ளோம். குறிப்பாக கோடைகாலத்தில் ஃபேஸ் மிஸ்ட் பயனுள்ளதாக இருக்கும். கடுமையான வெயிலில் இருந்து நீங்கள் வீட்டிற்கு வரும்போது உங்கள் சருமத்தை ஆற்றுவதற்கு இந்த ஃபேஸ் மிஸ்ட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இப்போது இதனை எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. கிரீன் டீ [இலைகள் அல்லது தேநீர் பைகள்]
  2. எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்
  3. தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய்

முறை:

  1. முதலில் கிரீன் டீயை தயார் செய்யவும்.
  2. தயார் செய்த கிரீன் டீயை ஆற வைக்கவும்.
  3. பிறகு 5 சொட்டு எலுமிச்சை மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்க்கவும்.
  4. உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு
    அத்தியாவசிய எண்ணெயையும் நீங்கள் சேர்க்கலாம்.
  5. அவ்வளவு தான்! உங்கள் எளிய ஃபேஸ் மிஸ்ட் குளிர்சாதன பெட்டியில் வைக்க தயாராக உள்ளது. பயன்படுத்துவற்கு முன் 15-20 நிமிடங்கள் அதை வெளியே வைத்து பயன்படுத்தவும்.

எப்படி பயன்படுத்துவது?

  1. முதலில் முகத்தை சுத்தம் செய்யவும்.
  2. குளிர்சாதனப்பெட்டியில் இருந்து ஃபேஸ் மிஸ்டை வெளியே எடுத்து 5 செமீ தூரத்தில் இருந்து உங்கள் முகம் முழுவதும் தெளிக்கவும்.
  3. இதனை 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
  4. துளைகளை மூடுவதற்கு ஈரமான துணியால் துடைக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும்.

Views: - 294

0

0