தினமும் தலைக்கு குளித்தால் முடி உதிர்வு ஏற்படுமா…???

Author: Hemalatha Ramkumar
14 April 2023, 4:18 pm
Quick Share

நம் அன்றாட குளியல் நம்மை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும். ஆனால் தலைமுடியை தினமும் கழுவலாமா? உங்கள் தலைமுடியை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.

தினமும் முடியைக் கழுவுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கை முறையைப் பொறுத்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் ஒரு முறை உங்கள் தலைமுடியைக் கழுவலாம். இது தவிர உங்களுக்கு அரிப்பு இருந்தாலோ அல்லது உங்கள் உச்சந்தலையில் செதில்களாக இருந்தாலோ, உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும்.

உங்கள் தலைமுடியைக் கழுவ ஷாம்பு மிகவும் வலுவாக இருக்கக்கூடாது மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஷாம்புகள் உங்கள் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. எனவே உங்கள் கூந்தல் மென்மையாக இருக்கும்.

மேலும் தலைமுடியைக் கழுவ வெந்நீரைப் பயன்படுத்துவது பல பெண்கள் குளிர்காலத்தில் செய்யும் ஒன்று. சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது தலைமுடியை முற்றிலும் உலர்த்துகிறது.

உங்கள் உடலுக்கு ஒரு தனி துண்டு மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஒரு தனி துண்டு பயன்படுத்த வேண்டியது அவசியம். உடம்பு க்கு பயன்படுத்தும் துண்டு மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.

தலைமுடியை கழுவிய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம். ஒரு நல்ல கண்டிஷனர் உங்கள் முடி உதிர்வை குறைக்க உதவும். பலர் தற்போது ஹேர் மசாஜ் செய்து விட்டு தலைமுடியைக் கழுவ விரும்புகிறார்கள். நீங்கள் உச்சந்தலையில் எண்ணெயைப் பயன்படுத்தினால், அதனை நன்றாக கழுவுவதை உறுதிப்படுத்தவும். ஏனெனில், அதிகப்படியான எண்ணெய் பொடுகுக்கு வழிவகுக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 268

0

0