முகப்பரு வடுக்களை இயற்கைமாக மறைய செய்யும் மஞ்சள் ஃபேஸ் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
13 June 2023, 4:31 pm
Quick Share

நமது பாட்டிகளும் அம்மாக்களும் குளிக்கும் பொழுது முகத்திற்கு மஞ்சள் பூச வேண்டும் என்று உங்களுக்கு அறிவுரை கூறியிருக்கலாம். மஞ்சளானது பல நூற்றாண்டுகளாக சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு இயற்கை மூலிகை. மஞ்சள் குறிப்பாக முகப்பருக்களால் உண்டான வடுக்களை போக்க உதவுகிறது. மஞ்சளில் காணப்படும் வீக்கத்தை எதிர்த்து போராடும் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் முகப்பரு காரணமாக சருமத்தில் ஏற்படும் சிவத்தல், வீக்கம் மற்றும் சரும நிற மாற்றத்தை போக்க உதவுகிறது.

மேலும் மஞ்சளானது சருமத்தின் அமைப்பை மேம்படுத்த உதவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே இனியும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் முகப்பரு வடுக்களை போக்க மஞ்சள் பேஷியலை எப்படி தயார் செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

நமக்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் ஆகிய மூன்று பொருட்களும் தேவைப்படும். இந்த மூன்று பொருட்களையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் முழுவதும், குறிப்பாக முகப்பரு தழும்புகள் இருக்கக்கூடிய இடங்களில் தடவவும். பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர வைக்கவும். இதன் பின்னர் மாய்ஸ்ரைசரை பயன்படுத்தவும்.

மஞ்சள் பொடியில் காணப்படும் குர்குமின் சருமத்தில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை ஆற்றுவதன் மூலமாக முகப்பரு வடுக்களை போக்குகிறது. அடுத்தபடியாக இதில் நாம் சேர்த்துள்ள தேன் மற்றும் தயிர் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டு உள்ளதால் இது பாக்டீரியாக்களால் உண்டாகும் முகப்பருவை எதிர்த்து போராட உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 1840

0

0